வெஜிடபுள் போண்டா செய்ய...
அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.
பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்ந்தால் பட்டாணி நிறம் மாறாது.கபாப் செய்யும் போது 3 பிரெட்துண்டுகளை நளைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும்.
கொத்தமல்லி இலைகளை நன் ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
வெங்காயத்தை நறுக்கி அதன் மீது வெண்ணெய் தடவி வைத்தால் வெங்காயம் வாடாமல் இருக்கும்.
0
Leave a Reply